ஹேராம் படத்தில் ஷாருக்கான் நடித்தற்காக சம்பளம் வாங்கவில்லை மாறாக நடிகர் கமலிடம் என்ன வாங்கினார் தெரியுமா.? உலக நாயகன் சொன்ன உண்மை தகவல் இதோ.

0

பாலிவுட் சினிமாவில் தொடர்து வெற்றிகளை கொடுத்து அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக வலம் வருகிறவர் நடிகர் ஷாருக்கான்.

இவருடன் பல ஜாம்பவான்கள் நடிக்க ஆசைப்படுகின்றனர் அந்தவகையில் பலருடன் பல நடிகர், நடிகைகள் நடித்து தனது திரை உலக பயணத்தையும் வேற லெவலுக்கு ஏற்றிச் சென்றுள்ளனர் ஆனால் இவரது மிகப்பெரிய ஆசை என்னவென்றால் திரை உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் சிவாஜி மற்றும் கமலுடன் நடிப்பது தான் மிகப்பெரிய ஒரு ஆசையாக வைத்திருந்தார்.

இருப்பினும் சிவாஜியுடன் இவர் நடிக்காத அது நிறைவேற ஆசையாக இருந்தாலும் ஒரு வழியில் கமலுடன் இணைந்து ஹேராம் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார். கமலுக்கு நண்பனாக இந்த திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு உயிரூட்டினார் ஷாருக்கான்.

படம் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது ஆனால் இந்த படதிற்காக எந்த ஒரு தொகையையும் கமல்  ஷாருக்கான்னுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. இத்தனை வீடியோ ஒன்றில் கமல் குறிப்பிட்டுள்ளார் அவர் கூறியது.

ஷாருக்கான் என்னுடன் தமிழில்  நடித்தது நினைப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது மேலும் ஷாருக்கான் இந்த திரைப்படத்திற்காக சம்பளமாக எந்த ஒரு தொகையையும் வழங்கப்படவில்லை.

மேலும் படத்தின் பட்ஜெட் பற்றியும் ஷாருக்கானுக்கு எதுவும் தெரியாது இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை அதற்கு மாறாக வாட்ச் மட்டுமே பரிசாக கொடுத்தேன் மேலும் இந்த படத்தை இந்தியில் வெளியிடும் உரிமத்தை ஷாருக்கானுக்கு கொடுத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்கள்.

கமல் பேசிய அந்த பழைய வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வேகம் எடுத்து உள்ளது.