வெளிநாட்டில் இருந்து ஆடம்பர பொருட்களை எடுத்து வந்த ஷாருக்கான்.! தடுத்து நிறுத்திய ஏர்போர்ட் அதிகாரிகள்..

0
SHARUN-KHAN
SHARUN-KHAN

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துவரும் நடிகர் சாருக் கான் ஆடம்பர பொருட்களை வெளிநாட்டில் இருந்து எடுத்து வர இதனை அறிந்த ஏர்போர்ட் அதிகாரிகள் ஷாருக்கான் அவர்களை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார்கள் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சாருக் கான் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கம்.

மேலும் அவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் கோடிக்கணக்கில் வசூலை ஈட்டி வருகிறது. அந்த வகையில் இவர் ஹிந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்த வருகிறார் உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது இவர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தினை ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அதாவது நடிகர் சாருக் கான் அவர்கள் ஆடம்பர கடிகாரங்களுக்கு வரி கட்டவில்லை என்று ஏர்போர்ட்டிலேயே ஷாருக்கான் தடுத்து நிறுத்தி இருக்கும் சம்பவம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது சினிமாவை பொருத்தவரை அனைவருக்கும் சுங்கவரி பிரச்சனை வருவது வழக்கம். அதுவும் முக்கியமாக நடிகர்கள் தங்களுடைய ஆடம்பரப் பொருட்களுக்கு சுங்க வரி செலுத்துவது இல்லை.

இப்படிப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரும் பல பொருட்களுக்கு சுங்க வரி கட்டாமல் பல வழக்குகளில் சிக்கி இருக்கிறார்கள் நடிகர்கள். அந்த வகையில் தற்போது ஷாருக்கானும் மாட்டியிருக்கிறார். அதாவது ஷாருக்கான் அவர்கள் நவம்பர் 11ஆம் தேதி அன்று ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளார் அங்கு சர்வதேச சினிமா மற்றும் கலாச்சாரத்திற்கான அவரது பங்களிப்பிற்காக அவருக்கு குளோபல் ஜகான் ஆப் சினிமா மற்றும் கலாச்சார கதை விருது வழங்கப்பட்டது.

SHARUKHAN
SHARUKHAN

இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பி இருக்கிறார் அப்பொழுது மும்பை சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3ல் தனியார் ஜெட் விமானத்தில் வந்திருக்கிறார் அப்பொழுது அவர் கொண்டு வந்த பொருட்களில் ஆடம்பரப் பொருட்கள் இருந்தது அதிலும் சுமார் 18 லட்சம் மதிப்புள்ள ஆறு ஆடம்பர கடிகாரங்களுக்கான பேக்கேஜிங் இல்லை என்ற தகவல் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்த ஷாருகான் சுங்கவரி செலுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது பின்பு ஷாருக்கான் மற்றும் அவரது மேலாளர் சுங்கவரி செலுத்திய பிறகு தான் விமான நிலையத்திலிருந்து வெளியே அனுப்ப அனுமதிக்கப்பட்ட உள்ளார்கள்.