முன்னணி நடிகரின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் செம்பருத்தி சீரியல் ஷபானா.! வைரலாகும் புகைப்படம்..

மாடலாக தனது மீடியாவை தொடங்கி தற்போது சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக கலக்கி வருபவர் தான் நடிகை ஷபானா. சீரியலில் நடிப்பதை தொடங்கியதால் இவரின் குடும்பத்தில் இவரிடம் கடந்த நான்கு வருடங்களாக பேசாமல் இருந்து வருகிறார்கள். மேலும் இவருடைய குடும்பத்தினர்கள் இந்து பையனை காதலிக்கக் கூடாது என்று சொல்லி வந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த செழியனை திருமணம் செய்து கொண்டார்.

இதன் ஷபானாவை அவருடைய குடும்பத்தினர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். இருந்தாலும் ஷபானா தொடர்ந்து சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பேவரைட் நடிகையாக மாறிவுள்ளார். இவர் முதலில் விளம்பர படங்களில் பிரபலமடைந்துள்ளார் அடுத்ததாக விஜயதசமி என்ற மலையாள தொடரில் நடித்து சின்னத்திரையில் இன்று கொடுத்தார்.

இதன் மூலம் பிரபலம் அடைந்த இவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இந்த சீரியலில் பார்வதி என்று கதாபாத்திரத்தில் நடித்த தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

சொல்லப்போனால் வெள்ளித்திரை நடிகைகள் அளவிற்கு ஷபானா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவ்வாறு இவர் நடித்தவரும் செம்பருத்தி சீரியல் விரைவில் முடியை இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஆரியணை திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவருக்கு தற்பொழுது வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதாவது விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் ‘பகையே காத்திரு’ என்ற படத்தில் ஸ்ம்ருதி வெங்கடேஷ், வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ள நிலையில் திரைப்படத்தில் நடிகை ஷபானா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் அது குறித்த சில புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து உறுதி செய்துள்ளார். இவ்வாறு சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு என்ட்ரி கொடுத்திருப்பதால் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

its_shabana
its_shabana

Leave a Comment