ரசிகர்கள் முகம் சுழிக்கும் வகையில் தளபதி விஜய் நடித்த ஏழு திரைப்படங்கள்..! இதற்கெல்லாம் அவருடைய அப்பா தான் காரணம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் மாபெரும் வெற்றி திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தாலும் ஆரம்பத்தில் இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் மக்கள் நிராகரிக்கும் வகையில் அமைந்துள்ளது அந்த திரைப்படங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

நாளைய தீர்ப்பு இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் விமர்சனங்கள் ஏழ வழி வகுத்தது மட்டுமில்லாமல் இந்த மூஞ்சிக்கு ஹீரோ கதாபாத்திரம் கேட்கிறதா என விமர்சித்தது மட்டுமில்லாமல் அவருடைய தந்தை கூட அவரை அவமதித்தார்.

ரசிகன் திரைப்படம் ஆனது  தளபதி விஜய் நடிப்பில் வெளியான மிகவும் மோசமான திரைப்படம் என்றால் இந்த திரைப்படத்தை குறிப்பிட்டு சொல்லலாம் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் கதையை நம்பாமல் நடிகை சங்கவியின் கவர்ச்சியை மட்டும் நம்பி இந்த திரைப்படத்தை எடுத்தார்கள் அந்த வகையில் பாத்ரூமில் குளிக்கும் போது சோப்பு போடும் அளவிற்கு மிகவும் மோசமான காட்சிகளில் விஜய் நடித்திருப்பார் இந்த காட்சிகளை விஜயின் தந்தை தான் அமைத்தார்.

தேவா திரைப்படம் ஆனது எஸ் ஜே சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் சங்கவியின் கவர்ச்சிக்கு பதிலாக சிவானியின் கவர்ச்சி இடம் பெற்றது அந்த வகையில் இந்த திரைப்படத்தின் கதை எல்லாம் மிகவும் பிரமாண்டமான காதல் கதையாக அமைந்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று மிகவும் மோசமாக அமைந்தது அதாவது சின்ன பொண்ணு வேணாம் மாமா பெரிய பொண்ணு வேணாம் மாமா அத்தை மட்டும் போதும் என்று முகம் சுழிக்கும் வகையில் வரிகள் அமைந்திருந்தது.

விஷ்ணு இந்த திரைப்படம் விஜயின் தந்தை அவர்கள் தான் இயக்கியிருந்தார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் கதை பெருமளவு இல்லாத  நிலையில் சங்கவியின் கவர்ச்சி அதிகமாக காணப்பட்டது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு சங்கவியை விஜய் காதலித்து வந்ததாக கூட சில செய்திகள் சமூகவலைதள பக்கத்தில் வெளியாகியது.

கோயம்புத்தூர் மாப்பிள்ளை இந்த திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக சங்கவி நடித்திருப்பார் அது மட்டும் இல்லாமல் இதில் பல்வேறு கிளுகிளுக் காட்சிகள் இடம் பெற்றது மட்டும் இல்லாமல் செந்திலின் காமெடி கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் பெரும் அளவு ரசிக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் விஜய்யை பலான பட நடிகர் என  பலரும் கூறும் வகையில்  அமைந்தது.

நெஞ்சினிலே இந்த திரைப்படத்தின்  விஜயின் மறுபக்கம் உருவகமாக அமைந்தது ஆனாலும் இந்த திரைப்படம் விஜயின் தந்தை திரைப்படம் என்பதால் இந்த திரைப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜயை ஏற்றிவிட்டது பலருக்கும் எரிச்சலை உண்டாக்கியது.

Leave a Comment