சீரியலில் நாயகன், நாயகி நிஜத்தில் அல்ல.! உண்மையை உடைத்த விக்கி.

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியலில் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மேக்னா வின்சென்ட். இதனைத் தொடர்ந்து அவர் பல சீரியல்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வந்தார்.

இந்த நிலையில் அவர் வெள்ளித்திரையில் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மிகப்பெரிய ஹிட்டடித்த கயல் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேகனா அவர்கள் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேக்னா அவர்கள் வெள்ளித்திரை,சின்னத்திரை போலா மாடலிலும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்னா அவளும்-நானும் சீரியல் தொடர்ந்து தெய்வம் தந்த வீடு, பொன்மகள்வந்தாள் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார் இந்த நிலையில் மேக்னா அவர்கள் டான் டோனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்த நிலையில் இளவரசி, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைய தொடங்கியவர்.

mekhna
mekhna

விக்கி தற்போது இவர் பொன்மகள்வந்தாள் சீரியலில் மேக்னா உடன் இணைந்து நடித்து வருகிறார் விக்கி, ஹரிப்பிரியா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தற்போது அவருக்கு ஒரு மகனும் உள்ளார் இந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து. திருமணம் செய்யப்போவதாக தகவல் கசிந்தன இந்தநிலையில் விக்கி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியது கடந்த சில மாதங்களாக இது போன்ற சர்ச்சைகள் வெளிவருகின்றன. சீரியலில் நாயகன், நாயகி இணைந்து நடித்தால் நிஜத்திலும் காதல் செய்துவருவதாக பேசுகிறார்கள். எல்லாருடைய குடும்பத்திலும் சண்டைகள் வருவது சகஜம்தான் நடிகர் நடிகைகள் குடும்பத்திலும் பிரச்சனைகள் வருகின்றன எனக்கு ஆறு வயதில் மகன் இருக்கிறான் அவனது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் தேவையில்லாமல் எங்களது வாழ்க்கையை சீர்குலைக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.