தற்பொழுது உள்ள தமிழ் ரசிகர்களின் ரிசன்ட் க்ரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருப்பவர் சீரியல் நடிகை ரித்திகா. இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது மற்ற போட்டியாளர்கள் போல் இல்லாமல் தாவணி பாவாடை, புடவையில் குடும்பப் பெண்ணாக தமிழ் பெண்ணிற்கு எடுத்துக்காட்டாக பங்கு பெற்று வந்ததால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெறும் சமையல் நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று புதிதாக அறிமுகம் ஆவர்ளையும் பிரபலமடைய செய்து வருகிறார்கள். எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியாளரும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.
அந்த வகையில் ரித்திகாவும் இந்நிகழ்ச்சிக்கு முன்பு பல சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த சீரியலும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை. ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரின் சின்னத் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் இவர் லேட்டா கலந்து கொண்டாலும் லேட்டஸ்ட்டாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிதாக அறிமுகமாகியுள்ள பாக்யலக்ஷ்மி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


இவ்வாறு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் ஹோம்லியாக புடவையில் ஸ்டைலாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதிலிருந்தே இவரைப்பற்றி தெரிகிறது இவர் அடக்க ஒடுக்கமான தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு பெண் என்று.
