“என்ஜாய் எஞ்சாமி” பாடலுக்கு கர்ப்பமாக இருக்கும் போதே செம்ம ஆட்டம் போட்ட சீரியல் நடிகை.! வைரல் வீடியோ இதோ.

விஜய் டிவியில் நடிக்கும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவாக இருப்பதால் அவர்களுக்கு என ஒரு ரசிகர் கூட்டம் எப்போதும் இருந்து வருகிறது அந்த வகையில் தொகுப்பாளர் தொடங்கி சீரியல் நடிகை வரை பலரும் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு மேலும் ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டு சின்னத்திரையில் ராணியாக வலம் வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நடித்து மீடியா உலகில் கவனிக்கப்பட்டவர் நடிகை சமீரா. அதே சீரியலில் இவருடன் இணைந்து கடித்த அன்வர் என்பவரை  காதலித்து ஒரு கட்டத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு “றெக்கை கட்டி பறக்குது” என்ற சீரியலிலும் சமீரா நடித்தார் மேலும் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சீரியலில் இவருக்கு எப்படி நிஜத்தில் நல்ல கணவரை கொடுத்ததோ அதுபோல இன்ஸ்டாகிராம் இவருக்கு பல ரசிகர்களை அள்ளிக் கொடுத்தது.

சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக இருக்கும் சமீரா. மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் மற்றும் குடும்பங்காக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.இப்படியிருக்க இவர் திருமணம் செய்து கொண்ட பிறகு ஒரு மாதத்தில் முன்னாடி கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்தார்.

இந்த சூழலில் அவர் கர்ப்பமாக இருக்கும் சுழலில் “என்ஜாய் எஞ்சாமி” என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் டிரெண்டிங்கில் வலம் வருகிறது.

Leave a Comment