இறப்பதற்கு முன்பு V J சித்ரா நடித்த கடைசி திரைப்படம். !! வைரலாகும் ஸ்னீக் பீக் வீடியோ..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் சீரியல் நடிகை VJ சித்ரா. என்னதான் இவர் இதற்கு முன் பல சேனல்களில் தொகுப்பாளினியாக வேலை செய்து இருந்தாலும் இந்த சீரியல் மூலம்தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவரின் குறும்புத் தனமான பேச்சு, சிரிப்பு, நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் நடனத்தை கைவந்த கலையாக கொண்டிருந்தார்.

CALLS-MOVIE
CALLS-MOVIE

இவர் சமீபத்தில் தான் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் ரசிகர்கள் இன்னும் இவரை மறக்கவே இல்லை. இவர் பல பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்.இவரின் கனவே திரைப் படத்தில் நடிப்பதாக இருந்தது அப்படி இருக்கும் நிலையில்  இவர் இறப்பதற்கு முன் கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

calls
calls

இவர் நடித்த இந்த கால்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லரை 1.70 மில்லியனுக்கு மேற்பட்ட  ரசிகர்களால் பார்க்கப்பட்டது. இந்த திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஸ்னிக் பிக் வீடியோ இணையத்தளத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதோ அந்த வீடியோ.