என் மனைவியின் சாவிற்கு இவர்கள் தான் காரணம்.. என 7 பேர் மீது புகார் அளித்த விஜே சித்ராவின் கணவர்.!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சித்ரா பற்றிய தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சித்ராவின் மறைவிற்கு அரசியல் பிரமுகர் தான் காரணம் அது யார் என்பதை சித்ராவின் கணவர் சமீபத்தில் புகார் அளித்துள்ளார்.

அதாவது ஏராளமான கஷ்டங்களுக்கு பிறகு தனக்கென ஒரு அங்கீகாரமும் கிடைத்து மிகவும் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில் திடீரென்று தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டவர் தான் சித்ரா. இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.அந்த வகையில் இவர் முதன்முறையாக கால்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். ஆனால் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இறந்துவிட்டார்.

இவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது திரைப்பரபலங்கள் ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.  சித்ராவின் தற்கொலைக்கு அவருடைய கணவர் ஹேம்நாத்  தான் காரணம் என சொல்லப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பிறகு கடந்த 25ஆம் தேதி சென்னை காவலர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் “நானும் என்னுடைய மனைவி சித்ராவும் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம் ஆனால் என் மனைவி தற்கொலை செய்து கொள்ளக் காரணமாக இருந்தவர்களை நான் காட்ட வேண்டும் என்பதால்தான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்றும் என் மனைவியின் தற்கொலைக்குப் பின்னால் பண பலமும் அரசியல் பலமும் கொண்ட மாஃபியா கும்பல் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை,

ஆனால் அவர்களுக்கு பயந்து அதை யாரும் வெளியே சொல்லாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார் மேலும் அவர்களது பலத்தினால் என்னைப் போன்ற சாதாரண மனிதனால் எதுவும் செய்ய முடியாது என்மீது இருக்கும் பழியை போக்கவே நான் இன்னும் உயிரோடு வாழ்ந்து வருகிறேன் எனவும் சுப்பாராவ், சரோஜா ராகவ்,மதுசூதனன், வெங்கடேஷ், யாமினி, இமானுவேல் ராஜ் உள்ளிட்ட 7 பேர் மீது தன்னுடைய மனைவியின் சாவிற்கு காரணம் என்றும் என்னிடம் பணம் கேட்டு மிரட்டியகிறார்கள் என்றும் புகார் அளித்துள்ளார்.

Leave a Comment