நாயகி சீரியலில் நடிக்காததற்கு காரணம் இதுதான்!!. சீரியல் நடிகை வெளியிட்ட தகவல்.!! விவரம் இதோ.

0

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வித்யாபிரதீப் தற்போது சீரியலில் தொடர்ந்து நடிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாயகி சீரியலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி மாற்றப்பட்டு கிருஷ்ணா மற்றும் நட்சத்திரா நடித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் மாற்றப்பட்டதால்  ரசிகர்களால் இவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த சீரியலில் முதலில் ஹீரோயினாக நடித்த வித்யா பிரதீப்க்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்பதை அனைவரும் அறிந்ததே. ரசிகர்கள் அவரை விரும்பி ஆனந்தி என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில் இந்த தொடரில் அவர் தொடர்ந்து நடிக்காதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் இந்த சீரியலில் அவர் நடிக்காததற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. அதற்கு பதிலளக்கும் வகையில் நடிகை வித்யா பிரதீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் கொரோனா பயத்தால் நான் நாயகி சீரியலில் இருந்து விலகவில்லை என்றும் எங்கள் பகுதி முடிந்தது என்று நான் இதனை கடந்த மாதமே பகிர்ந்திருந்தேன்.

இந்நிலையில் திடீரென  நான் ஏன் விலகினேன் என்று கேட்கப்படும் கேள்விகளால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன் நான் பாதியில் நடிப்பதில் இருந்து விலக மாட்டேன் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து வித்யா பிரதீப்பை தொடர்ந்து நாயகி சீரியலில் பார்க்க முடியாது என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

nayagiserial actress
nayagiserial actress