நாயகி சீரியல் நடிகை நடித்திருக்கும் பவுடர் பேய் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்.!!

0

serial actress vidhya pradeep powder movie first look poster: இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பவுடர். இந்த பேய் திரைப்படத்தில் சன் டிவி நாயகி சீரியலில் நடித்திருந்த வித்யா பிரதீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மகாராணி போஸில் கையில் வாளுடன் வித்யா பிரதீப் அமர்ந்திருக்கிறார் ஆனால் மறுபுறம் கண்ணாடியில் பேயாக தெரிகிறார்.

மேலும் இந்த பவுடர் பேய் திரைப்படத்தில் நடிகர்கள் மனோபாலா, வையாபுரி, ஆதவன், ஷாலு ஷம்மு போன்றோர் நடித்து வருகின்றனர். எனவே இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வித்யா பிரதீப் ஏற்கனவே அருண் விஜய்யுடன் இணைந்து தடம் என்ற திரைப்படத்தில் போலீசாக நடித்து இருந்தார். மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு நடிகர் ஜெய்யுடன் இணைந்து அவள் பெயர் தமிழரசி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் சைவம், பசங்க 2, அச்சமின்றி, மாரி 2 பொன்மகள்வந்தாள் என பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் சீரியலில் நடித்ததன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காமெடி நடிகை ஷாலு ஷம்மு இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து  திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.