குழந்தை நட்சத்திரமாக நடித்த சீரியல் நடிகையா இது.! புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்

sujitha112

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா. தற்போது விஜய் டிவியில் மாபெரும் வெற்றி நடை போட்டு வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் அண்ணி கதாபாத்திரத்தில் தனம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவர் வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். பிறகு பெரிதாக சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். அந்த வகையில் இவர் பாக்கியராஜ் இயக்கி நடித்திருந்த  முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பாக்கியராஜின் மகனாக நடித்து இருப்பார்.

sujitha 13
sujitha 13

சுஜிதா முந்தானை முடிச்சு  திரைப்படத்தில் நடிக்கும் பொழுது மூன்று வயது. அப்பொழுதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவர் வெள்ளிதிரையில் பல படங்களில் நடித்திருந்தாலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.

sujitha 15
sujitha 15

இந்த சீரியலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.இந்நிலையில் சுஜிதா விளம்பர இயக்குனர் தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

sujitha 12
sujitha 12

சுஜிதா தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தனது மகனுடன் இணைந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்துக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.