மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த பிரபலங்கள் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் அது வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி, சின்னத்திரையாக இருந்தாலும் சரி தான் மக்கள் கொண்டாடுவார்கள்.
உலகநாயகன் கமல்ஹாசன் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் சின்னத்திரை பக்கம் தற்பொழுது திசைதிருப்பி விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இது சீசன்னாக நடைபெற்று வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அப்படி கடந்த பிக் பாஸ் சீசன் 4 – ல் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அவர்களில் ஒருவராக சிவானி நாராயணனும் கலந்து கொண்டார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக சில சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு இளசுகளின் ராணியாகவும் வலம் வந்தவர்.
உள்ளே சென்ற சிவானி நாராயணனுக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஒரு கட்டத்தில் பிக் பாஸ் வீட்டில் சரியாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாததால் மக்கள் அவரை வெறுக்க தொடங்கினர்.
இடையில் அவரது அம்மா வந்து உன்னுடைய வேலையை நீ சிறப்பாகச் செய்தாலே நீ மக்களுக்கு இன்னும் பிடிக்கும் என கூறினார். அதை நன்கு புரிந்து கொண்ட சிவானி நாராயண அடுத்த அடுத்த நாட்களில் தன் திறமையை முழுவதுமாக வெளிக்காட்டி மக்களின் பாசத்தை சம்பாதித்தா.
இருப்பினும் அவரால் இறுதி வரை பயணிக்க முடியாமல் போனது.
வெளியே வந்த சிவானி புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தால் ரசிகர்கள் ஷாக்காகினர்.
இந்த நிலையில் சிவப்புக்கலர் மாடர்ன் உடையில் செம போஸ் கொடுத்து புகைப்படங்களை இளசுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. மேலும் இவர் இன்னும் திருந்தவில்லை என கூறிக்கொண்டு வருகின்றனர்.




