விஜய் டிவியின் புதிய தொடரில் அறிமுகமாக உள்ள செம்பருத்தி சீரியல் ஷபானா.! எப்படிப்பட்ட கேரக்டர் தெரியுமா.?

SHABANA 1
SHABANA 1

தற்பொழுது வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை  நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது. அந்தவகையில் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து  தொடர்ந்து சின்னத்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை ஷபானா.

இந்நிலையில் தற்பொழுது ஷபானா புதிதாக அறிமுகமாக உள்ள விஜய் டிவி சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.  விஜய் டிவி பொதுவாக தொடர்ந்து பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பாகி டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பல சீரியல்களை ஒளிபரப்பி வருவதால் ரசிகர்கள் விரும்பும் வகையில் புதிய செய்திகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது செல்லப்பிள்ளை என்ற புதிய சீரியலை அறிமுகப்படுத்த உள்ளார்கள்.

ஷபானா இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியலில் கடந்த மூன்று வருடங்களாக நடித்து வருகிறார்.இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று டாப்பில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வந்த ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். செம்பருத்தி சீரியலில் ஷபானாக்கு ஜோடியாக கார்த்திக் நடித்திருந்தார் இந்த சீரியலிலும் ஷபானா கிராமத்துப் பெண் போல் பாவப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இதனை தொடர்ந்து தற்போது செல்லப்பிள்ளை தொடரிலும் அதே போன்ற  கேரக்டரில் தான் நடிக்க உள்ளார்.