டாப் நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகள் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளித் தெளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சரண்யா துராடி விதவிதமான உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
மேலும் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலம் அடையும். பெரும்பாலும் நடிகைகள் பலரும் முதலில் சின்னத்திரை சீரியல்களில் களமிறங்கி அதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி பின்பு வெள்ளித்திரையில் கால்தடம் பதிக்கவே முயற்சிக்கின்றன.
அந்த வகையில் சரண்யா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற தொடரில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். மேலும் பல சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்து வருகிறார். தற்போது பல சேனல்களில் வித்தியாச வித்தியாசமான கதை களத்துடன் சீரியல்கள் களமிறங்குகின்றன.
அந்த வகையில் தற்போது இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் “வைதேகி காத்திருந்தாள்” என்ற தொடரில் பிரஜன் உடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இந்தத் தொடரில் இவர் ஒரு கில்லாடி, திமிரு பெண்ணாக நடித்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா துராடி தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரே டிஷர்ட்டுக்குள் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிங்கிள்ஸ்களை வெறுப்பேற்றி வருகின்றனர். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கமெண்டுகளையும் லைக்குகளையும் குவித்து வருகின்றன.



