ராஜா ராணி சீரியலில் நடிப்பதற்கு மட்டும் இத்தனை ஆயிரம் சம்பளம் வாங்குகிறாரா ஆலியா மானசா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.  அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக வலம் வந்துகொண்டிருப்பது விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங்கான சீரியலாக ஓடிக்கொண்டிருப்பது ராஜா ராணி 2. இந்த சீரியல் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கதாநாயகியாக ஆலியா மானசா மற்றும் அவருக்கு ஜோடியாக சித்து நடித்து வருகிறார்.

மிகவும் இந்த சீரியல் விறுவிறுப்பாகவும், சுவாரசியங்களும் இருந்த வண்ணம் இருப்பதால் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஆலியா மானசா  கர்பமாக இருப்பதால் பிரசவத்தை முன்னிட்டு இந்த சீரியலில் இருந்து விலக உள்ளார்.

எனவே இந்த சீரியலில் சந்தியா கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் நடிப்பதற்காக ஆலியா மானசா ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு நாளைக்கு ரூபாய் 13 ஆயிரம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து இவருக்கு ஜோடியாக நடித்து வரும் சித்து ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இவ்வாறு இவர்கள் இருவரையும் தொடர்ந்து மற்ற நடிகர்-நடிகைகள் அனைவரும் இவர்களை விட குறைவாக வாங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment