நடிகை சாவித்திரி போலவே அச்சு அசலாக இருக்கும் கண்ணம்மா.!! குடுக்குற போஸ பாத்தா நயன்தாரா, கீர்த்தி சுரேஷல்லாம் அவ்வளவுதான் போல..

சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். ஆனால் என்னதான் இருந்தாலும் வெள்ளித்திரை நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் தான்.

நாள்தோறும் இவர்களை பார்ப்பதனால் என்னவோ இவர்கள் போடும் புகைப்படங்கள் வீடியோக்களுக்கு மட்டும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.  அந்த வகையில் தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை இயக்குவது பல புதிய கவர்ச்சி நடிகைகளை அறிமுகப் படுத்தியும் வருகிறார்கள்.

அந்தவகையில் தற்போது தொலைக்காட்சிகளில் முன்னணி வகித்து வருவது விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.அந்த வகையில் தொடர்ந்து TRP-யில் முன்னணி நாடகமாக வளம் கொண்டிருக்கும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்ட அவர்தான் நடிகை ரோஷினி. இவர் இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவரின் எதார்த்த நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அதோடு இந்த சீரியல் ஒரு பெண் எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்கப்படுவதால் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ரோஷினி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

roshni 5
roshni 5
roshni 2
roshni 2

அந்த வகையில் தற்பொழுது பழம்பெரும் நடிகை சாவித்திரி போல அச்சு அசலாக தன்னை அலங்கரித்து கொண்டு அட்டகாசமான போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரோஷ்னியை புகழ்ந்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

roshni 3
roshni 3

Leave a Comment