சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பிரபலங்கள் பலரும் முதலில் மாடலிங் துறையை தேர்வு செய்து அந்தத் துறையில் சிறப்பாக பயணித்து அதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மென்மேலும் வளர ஆரம்பிக்கின்றன அந்த வகையில் முதலில் மாடலிங் துறையில் இருந்து பின்பு சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்ரியன்.
இவர் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்லான் பாரதிகண்ணம்மா சீரியலில் ஹீரோயின்னாக கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார். மேலும் இந்த சீரியல் ஒரு நம்பர் 1 இடத்தில் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் ரோஷினின் நடிப்பும் ஆகும்.
ஆனால் இந்த சீரியலில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடித்து வந்த ரோஷினி சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார் மேலும் அவருக்கு பதில் தற்போது வினுஷா தேவி என்ற நடிகை நடித்து வருகிறார். இந்த நிலையில் ரோஷினி ஹரிப்ரியன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்பட்டு பார்த்துவரும் குக் வித் கோமாளி.
மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது சமையல் கலையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்ததைவிட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரோஷினியை பல ரசிகர்களும் ரசிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் பாவாடை தாவணி உடையணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் சில வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன. இதோ அந்த அழகிய புகைப்படம்.