முட்டி தெரிய அரை டவுசரில் இணையதளத்தை கதிகலங்க வைக்கும் தெய்வமகள் அண்ணியார்.? நீங்க என்ன ரெண்டு வயசு பாப்பா வா என கிண்டல் செய்யும் ரசிகர்கள்..

பொதுவாக வெள்ளித்திரையில் கிடைக்காத பிரபலம் சின்னத்திரையின் மூலம் கிடைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஏராளமான நடிகர், நடிகர்கள் இருக்கிறார்கள்.அந்த வகையில் தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகளும் ரசிகர்கள் விரும்பும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி வந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற சீரியல்தான் தெய்வமகள்.

இந்த சீரியல் சன் டிவியில் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த சீரியலில் நடித்திருந்த அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருந்தது அந்த வகையில் இந்த சீரியலில் வில்லியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவர் இந்த சீரியலில் வில்லியாக நடித்து இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த இவர் தமிழை தவிர மற்ற மொழி சீரியல்களில் தொடர்ந்து நடித்து மிகவும் பிஸியாக இருந்து வந்தார். அந்தவகையில் சில காலங்கள் தமிழ் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்து வந்த இவர் சமீப காலங்களாக சன் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம், திருமகள் மற்றும் ஜீ தமிழில் தமிழும் சரஸ்வதி ஆகிய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

என்னதான் இவர் தொடர்ந்து சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் தெய்வமகள் சீரியலில் கிடைத்த கேரக்டர் போல் இதற்கு மேல் கிடைக்க வேண்டும் என்று காத்து வருவதாகவும், சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தனக்கு ஏற்றாற்போல் கதாபாத்திரம் அமையவில்லை என்பதால் நடிக்கவில்லை என்றும் சமீப பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருவதால் குட்டையான உடையில் தனது முட்டி தெரியும் அளவிற்கு ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

reka kirushnapa
reka kirushnapa
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment