கொஞ்சம் சப்பையாக மாறிவிட்டேன் சீக்கிரம் பழைய ஃபார்முக்கு வந்துடறேன் மீண்டும் நடிக்க வந்த ரக்ஷா.! வெளியான வீடியோவால் ரசிகர்கள் கொண்டாட்டம்

0

ஒவ்வொரு தொலைக்காட்சியும் சமீபகாலமாக சினிமாவின் டைட்டிலை வைத்து சீரியலை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு சீரியலும் சினிமா டைட்டிலை வைத்து தான், அப்படி ஒளிபரப்பப்படும் சீரியல்களான கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே நாம் இருவர் நமக்கு இருவர் என பல சீரியல்கள் சினிமா டைட்டிலில் வெளியாகி வருகின்றன.

மேலும் சமீபகாலமாக ஒரு தொடர் முடிந்து விட்டால் அந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தால் அதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வருகிறது ஒவ்வொரு தொலைக்காட்சியும் அந்த வகையில் ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌனராகம் என்ற பல சீரியல்கள் இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது அப்படி தான் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த தொடரில் இரண்டு நாயகிகள் நடித்து வந்தார்கள் அதாவது ரக்ஷா மற்றும் ரேஷ்மி. அப்படியிருக்கும் நிலையில் கொரோனா லாக் டவுன் போட்டதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதனால் இந்த இரண்டு நடிகைகளும் சீரியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். லாக் டவுன் கூறியதும் கிளம்பி பெங்களூர் போய் விட்டார் ரக்ஷா. அதன் பிறகு இரண்டரை மாதம் கழித்து ஷூட்டிங் இருக்கு எனக் கூறினார்கள்.

ஆனால் அப்பொழுது பெங்களூர் மற்றும் சென்னையில் அதிகமாக பாசிட்டிவ் கேஸ் இருந்தது அதனால் எங்க வீட்டிலிருந்து அனுப்புவதற்கு தயங்கினார்கள். அதுமட்டுமில்லாமல் ஸ்டேட் விட்டு  ஸ்டேட் செல்வதற்கு ஈ பாஸ் என பல ரூல்ஸ் இருந்ததால் என்னால் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை லாக்டவுன்  முடிந்த பிறகு ஷூட்டிங் தொடங்கியது ஆனால் எனக்கு எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. அப்படி ஒரு நிலையில் சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷா இந்த தொடரில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் இந்த தொடரில் நடக்காத ரக்ஷாவை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்ததாக கூறப்படுகிறது அப்படியிருக்கும் நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அன்பே சிவம் என்ற புதிய தொடரில் ரக்ஷா நடிக்க இருக்கிறார் அதனை சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார் அவர் அதில் கூறியதாவது நான் மிகவும் சப்பையாக மாறிவிட்டேன் விரைவில் பழைய நிலைமைக்கு திரும்புவேன் உங்களை மீண்டும் சந்திப்பேன் என கூறியுள்ளார்.

raksha
raksha