பிக்பாஸ் சீசன் 5-ல் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகையா.! இதோ அவரே கூறிய பதில்

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்சிகளும் மிகவும் சுவாரசியமாகவும் காமெடியை மையமாக வைத்து உருவாக்குவதால் தொடர்ந்து ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை விஜய் டிவிக்கு அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் உலகம் முழுவதும் மிகவும் பேமஸ்சான ஒரு ரியாலிட்டி ஷோ-வாக வலம் வந்து கொண்டிருப்பது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி சினிமாவில் பிரபலமடைந்து இருந்தாலும் சரியான ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வருபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அதோடு வளர்ந்து வரும் இளம் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெறுவதற்கும் உதவுகிறது .

இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ்சுக்கு பலமுறை ஒரு சீரியல் நடிகையை கூப்பிடட்டும் அவர் வேண்டாம் என்று நழுவி வருகிறார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றிருக்கிறது அந்த வகையில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது சரவணன் மீனாட்சி தான்.

இந்த சீரியக்கென்று தற்பொழுது வரையிலும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த சீரியலின் மூலம் மிகவும் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை ரட்சிதா. இந்த சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை மிகவும் நன்றாக பயன்படுத்திகொண்டு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

சிரியர்களை தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு பிரபலமடைந்து உள்ள இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மார்க்கெட் இருப்பதால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியீடு மற்றும் தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீப பேட்டி ஒன்றில் ரச்சிதாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அனைத்து கேள்விகளுக்கும் சளிக்காமல் பதில் கூறி உள்ளார்.

rachitha
rachitha

அந்த வகையில் ரட்சிதாவிடம் உங்களுக்கு பிக்பாஸ் செல்ல ஆர்வம் இருக்கிறதா என்றும் இந்த சீசனில் உங்களை அழைத்தார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.அதற்கு ரட்சிதா இந்த சீசன் மட்டுமல்ல முதல் சீசனில் இருந்தே என்னை பிக்பாஸ் இருக்கு அழைக்கிறார்கள் ஆனால் எனக்கு வேண்டாம் என்று நான் தவிர்த்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment