ரச்சிதா மகாலட்சுமி செய்த செயலால் நெகிழ்ச்சியான ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி. இது தான் அவரின் முதல் சீரியலாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இந்த சீரியலை தொடர்ந்து இன்னும் பல சீரியல்களில் நடித்துள்ளார். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்திருந்தார். இதன் மூலம் இல்லத்தரசிகளின் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும்,  கலர்ஸ் தமிழில் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

இந்த புகைப்படம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றது.இந்நிலையில் ரட்சிதா தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்களை சோசியல் மீடியா வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்கள் எப்பொழுது வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிப்பீர்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

rachitha 01
rachitha 01

இந்நிலையில் ரச்சிதாவிற்கு சின்னத்திரையிலேயே பல வாய்ப்புகள் கிடைத்து வருவதால் அவர் வெள்ளி திரையில் நடிக்க மாட்டார் என்றும் சிலர் கூறிவருகிறார்கள். இது ஒருபுறமிருக்க ரச்சித்தா மகாலட்சுமி தற்போது கொரோனா பிரச்சனையினால் பலர் அல்லாடி வந்தார்கள்.

rachitha 02
rachitha 02

இந்நிலையில் தற்பொழுது வயதானவர்கள், குழந்தைகள் என்று அனைவருக்கும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கியுள்ளார் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவை நான் அப்லோட் பண்ணுவதற்கு அனைவர் மத்தியிலும் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக இல்லை.

rachitha 03
rachitha 03

இதனைப் பார்த்த நீங்களும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக என்று கூறிஉள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என்று அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.