actress priyabhavani shankar overtaking nayanthara: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகையை மிஞ்சுவதற்கு தமிழ்சினிமாவில் ஆளே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது சின்னத்திரை நடிகைகள் எல்லாம் அவரையே மஞ்சு வருகிறார்கள்.
முன்பெல்லாம் சினிமாவில் மவுசு குறைந்த நடிகைகள் சீரியலில் நடித்து வருவார்கள் அது மட்டுமில்லாமல் அவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் ஆகவே இருப்பார்கள் ஆனால் தற்போதெல்லாம் சீரியலில் புது புது இளம் நடிகைகளாக அறிமுகப் படுத்தி வருகிறார்கள்.
மேலும் அவர்களுக்கு ஏற்றார்போல சீரியல்களில் காதல் காட்சி ரொமான்ஸ் காட்சி என பல்வேறு காட்சிகளையும் இடம்பெற வைத்து வருகிறார்கள் இந்நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் நடிகைகள் தற்போது தன்னுடைய பிரபலத்தின் மூலம் ரசிகர்களை கவர்வது மட்டுமல்லாமல் தற்போது வெள்ளித்திரையிலும் அவதாரம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் தங்களுக்கு உள்ள ரசிகர் கூட்டத்தை கலையாமல் வைப்பதற்காக அவ்வப்போது இணையத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை வேறு நடிகையின் மீது அலைபாயாமல் தடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில் சின்னத்திரையில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது வெள்ளித்திரையில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக மேயாதமான் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

ஆனால் தற்போது 50 திரைப்படங்களுக்கும் மேலாக இந்த ஆண்டு நடிக்க உள்ளாராம். தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா கூட அண்ணாத்த மற்றும் காத்து வாங்க இரண்டு காதல் என இரண்டு திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நடிகை நயன்தாராவின் பட வாய்ப்பையே மிஞ்சிய நடிகை என்றால் அது பிரியா பவானி சங்கர் தான் என ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு தரப்பினர் என்னதான் பத்து படம் நடிச்சாலும் நயன் தாராவோட ஒத்த படத்துக்கு ஈடாகுமா என கொண்டாடி வருகிறார்கள்.
