சின்னத்தம்பி சீரியல் நடிகையா இது!! அழகு கூடிக்கிட்டே இருக்கே!! வைரலாகும் புகைப்படம்…

0

serial actress Pavani Reddy photos viral: விஜய் டிவி தொலைக்காட்சியில் பணி புரியும் தொகுப்பாளர்கள்,  சீரியல் நடிகர்கள்,  நடிகைகள், காமெடி நடிகர்கள் என அனைவருமே தற்போது பிரபலமாகி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்தும் இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் இந்த டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்கின்ற சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடியது. மேலும் இந்த சீரியலில் பிரஜன் என்கின்ற நடிகர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நந்தினி கதாபாத்திரத்தில் பவானி ரெட்டி என்கின்ற நடிகை நடித்து இருந்தார்.

பவானி ரெட்டி சீரியலுக்கு வருவதற்கு முன் வஜ்ரம் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் ரெட்டைவால் குருவி, தவணைமுறை வாழ்க்கை போன்ற சீரியல்களிலும் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

பவானி ரெட்டி பிரதீப் என்கின்ற நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தங்களது இல்லற வாழ்க்கையை மிகச் சிறப்பாக நடத்தி வந்த இவர்களுக்கு ஒரு சில மனக்கசப்பு ஏற்பட அவரின் கணவர் அதில் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டு இறந்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து இவர் வாழ்க்கையே போனது என நினைத்து இருக்கும் நிலையில் தள்ளப்பட்டார்

அதன் பின்னர் தன்னை தேற்றிக்கொண்டு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகளையே ஓரம் கட்டும் அளவுக்கு அழகாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.