ஜீ தமிழ் விரட்டியடித்த நடிகைக்கு அடைக்கலம் தந்த சன் டிவி.! புதிய சீரியலில் என்ட்ரியாகும் செம்பருத்தி சீரியல் நடிகை..

0
sun-tv
sun-tv

பிரபல மாடலாக இருந்து தற்போது சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்திருப்பவர் தான் பரதா நாயுடு, தேன் மிட்டாய் என்ற திரைப்படத்தில் நடித்து முதல் முதலாக தன் பயணத்தை தொடங்கி இதனைத் தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார். இது தொடர்ந்து பரத நாயுடுவிற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இதை தொடர்ந்து தேவதையை கண்டேன் என்ற சீரியலில் மூலம் சின்னத்திரையில் அதிரடியாக என்ட்ரி கொடுத்த இவர் செம்பருத்தி சீரியலின் மூலம் பிரபலமான நடிகையாக மாறினார். அந்த தொடரில் மித்ரா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் கொடுத்துவரும் தாலாட்டு சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷனில் தயாரிக்நட்டி ஹீரோவாக நடிக்கும் வெப் என்ற திரைப்படத்தில் பரதா ஒரு ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்தத் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பதாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து ரசிகர்களும் ஆர்வமாக பரதாவின் ரீ-என்ட்ரி காக காத்து வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து ஜீ தமிழில் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று இரட்டை ரோஜா சீரியல் அக்ஷய் கமல் மற்றும் சாந்தினி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலில் போலீஸ் அதிகாரியாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பரதா நாயுடு, இதற்கான புரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரீ-என்ட்ரி கொடுத்ததை நினைத்து ரசிகர்கள அனைவரும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

bharatha naidu
bharatha naidu

மேலும் பரதா நாயுடுவின் ரசிகர்கள் அனைவரும் ஜீ தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுப்பதற்கு நல்ல ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து பரதா நாயுடுவிற்கு வாழ்த்துக்களையும் நல்ல விதமாக தெரிவித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து பரதா நாயுடு இன்னும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.