ஆத்தாடி என்ன ஒரு முத்தம்.. சும்மா பச்சக்குன்னு.! நித்யாராம் கிஸ் புகைப்படத்தை பார்த்து வயிறு எரியும் சிங்கிள்ஸ்…

தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகளின் பிரபல முன்னணி நடிகையாக சின்னத்திரை திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வித்யா ராம். இவரை நித்யா ராம் என்று சொன்னால் பெரும்பாலானோருக்கு தெரியாது நந்தினி சீரியல் கங்கா என்று சொன்னால்தான் அனைவருக்கும் இவரை தெரியும்.

இவர் தமிழ் சீரியலில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு கன்னட திரைப்படத்திலும் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். இவர் தமிழ் திரையுலகில் எவ்வளவு பிரபலம் அடைந்துள்ளாரோ அதுபோலவே கன்னடத் திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்யா ராம் அவர்கள் 2014 ஆம் ஆண்டில் வினோத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பிறகு சுந்தர் சி இயக்கத்தில் நந்தினி என்ற சீரியலில் நடித்து வருகிறார் இந்த சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரிலீஸ் ஆனது நித்யாராம் அவர்கள் 2019ஆம் ஆண்டில் கௌதம் என்ற ஆஸ்திரேலிய பிசினஸ் மேன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இவருடைய கணவர் முத்தமிடும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு ஒரு வருடத்திற்கு முன்பு எடுத்த புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

nithyaraam
nithyaraam

Leave a Comment