காக்கா மாறி இருந்த மைனா நந்தனி இப்படி பல பலனு மாறுவதற்கு காரணம் இதுதான்.. இவ்ளோ ஈஸியான டிப்ஸ்சா இருக்கே

நடிகை மைனா நந்தினி பியூட்டி சீக்ரெட் குறித்த வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆச்சரியமடைந்து உள்ளனர். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அப்படி முக்கியமாக இவர் இந்த அளவிற்கு பிரபலமடைவதற்கு காரணம் சரவணன் மீனாட்சி சீரியல் தான்.

இதில் மைனா என்ற கேரக்டரில் நடித்த நிலையில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். இவர் மதுரையை சேர்ந்தவர் என்பதால் இவருடைய பேச்சு ரசிகர்களை கவர்ந்தது எனவே சில சீரியல்களை தொகுத்து வழங்கவும் வாய்ப்புகள் கிடைத்தது இவ்வாறு சின்னத்திரையின் மூலம் பட்டிதொட்டி அங்கும் பிரபலமான மைனா நந்தினி தொடர்ந்து திரைப்படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என மைனா நந்தினி கலக்கி வரும் நிலையில் இவருடைய முதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு சீரியல் நடிகரும், நடன இயக்குனருமான யோகேஸ்வரன் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

மேலும் மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியிலும் பங்கு பெற்ற நிலையில் தொடர்ந்து பிஸியாக சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இவ்வாறு தற்பொழுது சினிமாவில் பிஸியாக இருந்து வந்தாலும் இவர் சின்னத்திரைக்கு அறிமுகமான காலகட்டத்தில் கருப்பாக இருந்ததால் பல இடங்களில் அவமானப்பட்டார்.

இவ்வாறு அவமானப்பட்டாலும் சிகிச்சை செய்து அழகாகாமல் இயற்கையான அழகை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருந்து வந்த நிலையில் இதனால் கொஞ்சம் தாமதமான ரிசல்ட் கிடைத்தது. அதாவது மைனா நந்தினி சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்த கலருக்கும் தற்போது அவர் இருக்கும் கலருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

எனவே இவருடைய அழகுக்கு சீக்ரெட் என்ன என ரசிகர்கள் கேட்டிருந்த நிலையில் மைனா நந்தினி ‘மைனா விங்ஸ’ என்ற தன்னுடைய யூடியூப் சேனலில் ரசிகர் கேட்ட கேள்விக்கு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதாவது ஏபிசி ஜூஸ் என அழைக்கப்படும் ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஜூஸ் தான் தன்னுடைய கலர் மாற்றத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

nandhini 1
nandhini 1

மேலும் தோல் நீக்கப்பட்ட கேரட், பீட்ரூட், ஆப்பில், இஞ்சி, புதினா இலை, எலுமிச்சை சாறு என அனைத்தையும் அரைத்து வாரத்திற்கு இரண்டு முறை குடித்தாலே போதும் கலர் நன்றாக மாறி இயற்கையாகவே பல பலவென இருக்கும் இதனை அனைத்தையும் தைரியமாக குடிக்கலாம் அதை தான் நானும் பயன்படுத்தினேன் என்று கூறி இருக்கிறார் அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment