புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சீரியல் நடிகை காவியா செய்த செயல்.. குவியும் லைக்குகள்.. வைரலாகும் புகைப்படம..

0

பிரபல சீரியல் நடிகை ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது தலைமுடியை பாதியாக கட் செய்து கொண்ட தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக சாதாரண மக்கள் செய்யும் உதவிகளை விடவும் திரைப்பிரபலங்கள் செய்யும் உதவிகள் சோசியல் மீடியாவில் எப்பொழுதுமே வைரலாவது வழக்கமாக இருக்கிறது.

ஏனென்றால், உதவி செய்யும் பிரபலங்கள் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதால் சில மணிநேரங்களிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்து விடுகிறது.இதை ஒரு சில ரசிகர்கள் ஆதரித்தாலும் சிலர் உதவி செய்வதை ஏன் சோசியல் மீடியாவில் வெளியிட்டு பப்ளிசிட்டி பண்றீங்க என்று கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அதற்கு நடிகைகள் நாங்கள் செய்வதை பார்த்து நீங்களும் இதே போல் செய்வீர்கள் என்ற எண்ணத்தில் தான் என்று கூறி வருகிறார்கள் நடிகைகள். பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு புதுமுக நடிகர், நடிகைகள் ஏராளமானோர் அறிமுகமாகி வருகிறார்கள்.

அந்த வகையில் மகாலட்சுமி,நந்தினி போன்ற சீரியல்களின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை காவியா சாஸ்த்ரி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுகாக தனது தலைமுடியை பாதியாக கட் செய்து உள்ளார். அந்தப் புகைப்படத்தை இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

kaviya sasthri
kaviya sasthri