Serial actress: சீரியல் நடிகை கல்யாணி ரோஹித் தனது சமூக வலைதள பக்கத்தில் நான் இறந்து விட்டதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர் என்றும் நான் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்றும் தயவு செய்து இதுவும் மாதிரி தவறான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என ஆதங்கத்துடன் வெளியிட்டிற்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் நடிகை சதாவின் தங்கையாக குழந்தை நட்சத்திரமாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் கல்யாணி. இந்த படத்தின் மூலம் பிரபலமான இவர் இதனைத் தொடர்ந்து சீரியல்களிலும் நடிக்க தொடங்கிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கினார்.
அப்படி அள்ளித்தந்த வானம், ஸ்ரீ உள்ளிட்ட மேலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு பெண் குழந்தை உள்ளது. சில காலங்களாகவே இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லை எனவே சில நாட்களுக்கு முன்பு தனது உடல்நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, 2016ஆம் ஆண்டு தனக்கு முதுகு தண்டுவடத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் அதன் பிறகு நான் நன்றாகவே இருந்தேன் ஆனால் தற்பொழுது அறுவை சிகிச்சை செய்த அதே இடத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறி இருப்பதாகவும் அவர்களுடைய அறிவுரையின்படி மீண்டும் அறுவை சிகிச்சை செய்து தற்பொழுது நலமாக இருக்கிறேன் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
இந்த காலகட்டத்தில் நான் மிகவும் மன உளைச்சலுடன் இருந்தேன் என்றும் குழந்தை மற்றும் கணவரை கவனிக்க வேண்டியது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் உடல் உபாதையால் அவதிப்பட்டுதாக என குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த வீடியோ வைரலாக கல்யாணி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இறந்து விட்டதாகவும் சில ஊடகங்கள் பொய்யான தகவலை பரப்பி வந்தது.
இதற்கு மீண்டும் ஒரு வீடியோ மூலம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இறந்த உடலில் என்னுடைய முகத்தை மார்னிங் செய்து தவறான செய்தியை பதிவு செய்து வருகிறார்கள். நான் உடல் நலம் இல்லாத போது மனரீதியில் சந்தித்த பிரச்சனைகளை குறித்து நான் பேசினேன் ஆனால் என்னை பற்றி தவறான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். தயவு செய்து இது போன்ற வீடியோக்களை வெளியிட வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார்.