பல திரைப்படங்களில் நடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.! எந்தெந்த திரைப்படத்தில் தெரியுமா.?

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகி முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இது புதிதாக அறிமுகமாகி இருந்தாலும் பாரதிகண்ணம்மா சீரியளுக்கு அடுத்ததாக டிஆர்பி-யில் இந்த நாடகம் தான் முன்னணி வசித்து வருகிறது.

இந்த சீரியல் குடும்பத்தலைவி  எவ்வளவு பிரச்சனைகளையும், அவமானங்களையும்  சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து உருவாகி வருவதால் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில் இந்த சீரியலின் மூலம்  பல நடிகர், நடிகைகள் புதிதாக அறிமுகமாகி உள்ளார்கள்.

அந்த வகையில் சுசித்ரா, விஷால், கிருத்திகா,சதீஷ்குமார், ஜெனிஃபர் உள்ளிட்ட இன்னும் பலரும் இந்த சீரியலில் நடித்து வருகிறார்கள்.  இந்நிலையில் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஜெனிஃபர்.

இவர் நடன கலைஞராகவும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்தவகையில் இவர் தமிழில் சிந்தாமல் சிதறாமல், குடிமகன் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

jenifre
jenifre

ஆனால் இவர் நடித்த எந்த திரைப்படமும் இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை. இந்நிலையில் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதோடு மற்ற நடிகைகளைப் போலவே இவரும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.இந்த சீரியலுக்கு பிறகுதான் இவர் இந்த திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதை ரசிகர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.

Leave a Comment