சன் டிவியில் நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை.! எந்த சீரியலில் தெரியுமா.?

பிரபல விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவுகளையும், கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பி வருவதால் இல்லதரசிகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக விளங்குகிறது.

இதனைத்தொடர்ந்து கதிர் மற்றும் முல்லை இவர்களின் ஒன் ஸ்கிரீன் லவ் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள்.

அந்தவகையில் மீனா என்ற கேரக்டரில் காமெடி வில்லியாக நடித்து வருபவர் தான் ஹேமா.  இவர் வில்லி கேரக்டரில் இருந்து தற்பொழுது நல்ல கேரக்டருக்கு வந்து கொண்டிருப்பதால் ரசிகர்களும் அதனை விரும்புகிறார்கள்.

அதோடு இந்த சீரியல் மிகவும் காமெடியாக போவதற்கும் இவர்தான் ஒரு முக்கிய காரணம். இந்நிலையில் தற்போது இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல வீடியோக்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

hema
hema

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியளுக்கு முன்பு சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்துள்ளதாக கூறி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். ஆம், இவர் சன் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்த பொண்ணுஞ்சல் சீரியலில் அழகிய கிராமத்துப் பெண் கேரக்டரில் நடித்துள்ளாராம்.

Leave a Comment

Exit mobile version