பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கேரக்டரை பார்த்து ஃபரினாவின் கணவர் என்ன செய்வாராம் தெரியுமா.? ஃபரினாவே கூறிய தகவல்

0

பொதுவாக ஒரு சீரியலில் நடித்து வரும் ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே அளவிற்கு வில்லிகளும் பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். அப்படிப்பட்டவர்களை ரசிகர்கள் க்யூட் வில்லி என்று கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் குடும்ப கதைகளை அழகானதாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் நாடகமாக அமைகிறது. அந்த வகையில் ஒரு பெண்ணை கணவர் சந்தேகப்பட்டு வீட்டை விட்டு அனுப்பி விட்டார் அந்த பெண் எப்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக கூறிவருகிறார்கள்.

இந்த சீரியல்  தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக TRP-யில் முன்னணி நாடகமாக  வலம் வந்து கொண்டிருக்கிறது.அந்த வகையில் இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் கண்ணம்மாவுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே அளவிற்க்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பயங்கரமான வில்லியாக கேரக்டரில் நடித்து வரும் ஃபரினாவுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.

ஃபரினா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசியுள்ளார் அதில் ரசிகர்கள் குண்டக்க மண்டக்க கேள்விகளுக்கும் தெளிவான பல பதில்களை கூறியுள்ளார்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா கேரக்டரைப் பற்றி உங்கள் கணவர் என்ன கூறுவார் என்று கேட்டதற்கு வெண்பா கேரக்டரை பார்த்தாலே அவர் எப்பொழுதும் சிரிப்பார் என பதில் அளித்துள்ளார்.