‘என் மகன் பெண்களுடைய வாழ்க்கையில் விளையாடி விடக்கூடாது’ என கூறிய சீரியல் நடிகை திவ்யா.!

0
serial-actress-divya
serial-actress-divya

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் செவ்வந்தி இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் நிறுத்த அவர்தான் நடிகை திவ்யா ஸ்ரீதர் இவர்.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் இதற்கு முன்பு மகராசி தொடரிலும் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டரான ராகவ் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். கேளடி கண்மணி உள்ளிட்ட பல தொடர்களில் இவருடன் இணைந்து நடித்த அர்ணவை திவ்யா ஸ்ரீதர் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அதில் விரைவில் எங்கள் குழந்தையை நாங்கள் எதிர்பார்க்க உள்ளோம்.. காதலர்களாக கணவன் மனைவியாக.. பெற்றோர்களாக.. அன்புடன் இதனை பேணுவோம் எனக்கும் என் குடும்பத்திற்கும் நீங்கள் கொடுத்த அளவில்லாத அன்பிற்கும் ஆதரவிற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அதன் பிறகு அருண் திவ்யா ஸ்ரீதர் இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட தன் கணவர் மீது திவ்யா போலீசில் புகார் அளித்திறந்தார். மேலும் போலீஸார்களும் அர்ணவை விசாரிக்க தற்பொழுது இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் யாருடைய துணையும் இன்றி சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த திவ்யா ஸ்ரீதர் தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென்றும் அவரை இந்த சமூகத்தில் பெண்ணுக்கு எப்படி மரியாதை கொடுக்கும் எனவும், பெண்ணுடைய வாழ்க்கையில் விளையாடக் கூடாது அந்த அளவுக்கு வளர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இந்த குழந்தை வேண்டாம் என்ற பலர் சொன்னதாக குறிப்பிட்ட இவர் ஆனால் நான் நன்றாக சம்பாதிப்பதாகவும், அழகாக இருப்பதாகவும் சொல்லிவிட்டு போக முடியும் எனினும் தான் தன் குழந்தையை வளர்க்க முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் நான் இவ்வளவு போராட்டத்தை சந்திப்பேன் என நினைத்து பார்க்கவே இல்லை எனவும் கூறியுள்ளார்.