விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சித்ரா.
டிசம்பர் 9ஆம் தேதி பிரபல ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் இழப்பு சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் வேதனையை அளித்தது.
இவர் தற்கொலை செய்ததற்கு காரணம் அவருடைய கணவர் ஹேமந்த் செய்த டார்ச்சரால் தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசார் விசாரித்ததில் தெரிய வந்தது.
தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் அவரின் கனவான கால்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் இறந்ததற்கு பிறகு தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்ற பல அப்டேட்கள் வெளிவந்தது.

இந்நிலையில் பிப்ரவரி 26ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது என்பதால் சித்ராவின் தீவிர ரசிகர்கள் கால்ஸ் திரைப்படத்திற்காக பேனர் வைத்து கொண்டாடி வருகிறார்கள். இதனை பார்த்த பலர் இப்படிப்பட்ட ரசிகர்களா என்று ஆச்சரியப்பட்டு பாராட்டி வருகிறார்கள்.