சின்னத்திரையில் வில்லியாக அறிமுகமான ஏராளமான நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் வில்லியாக நெகட்டிவ் ரோலில் நடித்து தற்போது கதாநாயகியாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளவர்தான் நடிகை சைத்ரா ரெட்டி.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரையில் பிரபலமடைந்தார்.பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியல் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியதால் இவர் மிகவும் அழகாக இருப்பதாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு அனைவருக்கும் பிடித்த நடிகையாக வலம் வந்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பிறகும் அழகு குறையாமல் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
இவ்வாறு இதுவரையிலும் வில்லியாக நடித்து வந்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்த சஞ்சீவ் நடித்து வருகிறார். இந்த சீரியல் அறிமுகமான முதல் வாரத்திலேயே டிஆர்பி-யில் இடத்தைப் பிடித்தது.
இதற்கு முக்கிய காரணம் என்றால் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரை தான் கூறலாம் ஏனென்றால் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு இருந்து வருகிறது. இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி தனது குடும்பத்திற்காக பல கஷ்டங்களை தாங்கி வருகிறார். அனைத்திலிருந்தும் மீண்டு வந்து தனது குடும்பத்திற்காக உழைத்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் வீட்டில் தற்பொழுது விசேஷம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது சைத்ரா ரெட்டியின் அக்கா மகளின் பெயர் சூட்டு விழா வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இதனை ரசிகர்கள் வைரலாக்குவதோடு மட்டுமல்லாமல் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.