சீரியல் நடிகைகளுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை..! அடேங்கப்பா இவங்க ஆட்டம் தாங்கலையே..!

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வர என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. மேலும் அந்த சீரியலை திருமுருகன் எழுதி அவரே இயக்கி நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் சுருதி சண்முகப்பிரியா போன்ற பலரும் இந்த சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிக் காட்டி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்கள்.

அதன்பிறகு சுருதி சண்முகப்பிரியா பொன்னூஞ்சல், கல்யாணப்பரிசு, வாணி ராணி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற பல சீரியலில் அவரது சிறப்பான நடிப்பை வெளிக்காட்ட இன்னும் சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார்.  அது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் கூட இவர் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் தனுஷ் அவர் நடிப்பில் வெளியான கொடி என்ற திரைப்படத்தில் சுருதி சண்முகப்பிரியா நடித்திருப்பார். அதன்பிறகு விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் பாரதிக்கு அக்காவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். என்ன காரணம் என்று தெரியவில்லை இவர் சீரியலை விட்டு கொஞ்ச நாளாக விலகி இருக்கிறார்.

இவர் சீரியல் விட்டு விலகி இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும்  இவர் சமூக வலைத்தளத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்னும் அவர் பக்கத்தில் வைத்துள்ளார்.

shruthi shanmuga priya
shruthi shanmuga priya

சுருதி சண்முகப்பிரியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அதனாலதான் இவர் மீடியாவை விட்டு விலகி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலும் இவர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை    திருமணம் செய்கிறார்.  இவர்களுக்கு சென்னையில் இன்று திருமணம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இவர்கள் திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் நேற்று பேச்சுலர் பார்ட்டி  ஒன்றை நடத்தியுள்ளனர் . அந்த பார்ட்டியில் ரோஜா சீரியல் பிரபலங்கள் மற்றும் பிரியங்கா, முல்லை காவியா, நாதஸ்வரம் பென்சி  பலரும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

shruthi shanmuga priya
shruthi shanmuga priya

இந்த பேச்சிலர் பார்ட்டி சிறப்பான முறையில் நடந்து முடிவடைந்தது. அந்த பேச்சுலர் பார்ட்டியின் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுருதி வெளியிட்டார். மேலும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன்பிறகு சீரியலில் நடிப்பாரா மாட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment