அழகில் நடிகைகளையே ஓரம்கட்டும் சீரியல் நடிகை ஆயிஷா.! வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியில் கண்டிஷனாக கலந்து கொண்டு பிறகு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு தனது நடிப்புத் திறமையினால் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஆயிஷா. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா நாடகத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இவருக்கு முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன் மகள் வந்தாள் என்ற சீரியலில் மூலம்தான் அறிமுகமானார். அதன் பிறகுதான் சன் டிவி மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் ஆயிஷா ஒரு பேட்டியில் பொன்மகள் சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருநாள் டிரஸ் மாத்தி கொண்டு இருக்கும் போதே சீரியலின் இயக்குநர் கதவை திறந்து விட்டு உள்ளே வந்ததோடு மட்டுமல்லாமல் ரெடியாகி வருவதற்கு  இவ்வளவு நேரம் ஆகுமா என்று கத்தினார் அதுமட்டுமல்லாமல் ஆயிஷா புதுமுக சீரியல் நடிகை என்பதால் இவரை மிகவும் மட்டமாக நடத்தினார் எனவும் இவ்வளவு பிரச்சனைகளைை தாண்டி நடித்து வந்ததாகவும்,இந்த பிரச்சனை முடிந்த சில நாட்களிலேயே சீரியலை விட்டு என்னை தூக்கி விட்டார்கள் என்றும் கூறிவந்தார்.

அதுமட்டுமல்லாமல் இது தான் அவருடைய முதல் சீரியல் என்பதால் இவருக்கு கிடைத்த பட வாய்ப்புகளையும், விளம்பரங்களையும் தவிர்த்து விட்டேன் என்றும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

இந்த சீரியலிற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாயா சீரியலில் நடித்து வந்தார். அதன்பிறகு சந்தானம் நடிப்பில் திரையுலகிற்கு வெளிவந்த தில்லுக்குதுட்டு என்ற திரைப்படத்திலும் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலிலும், தெலுங்கில் சாவித்திரி காரி அப்பாயி என்ற சீரியல்களிலும் தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது ஃகியூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்போது விதவதமான போஸ் கொடுத்து இளசுகளின் மனதை சுண்டி இழுக்கும் அளவிற்கு அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment