PROPOSAL DAY அன்று தன்னுடைய பாய் பிரண்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பிக்பாஸ் ஆயிஷா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் இந்த சீசனில் ஏராளமான ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள் பங்கு பெற்ற நிலையில் மற்ற சீசன்களை விட இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

ஜிபி முத்து, இசைக்கலைஞர் அசல் கோளாறு, சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஏடிகே, மாடல் ஷெரினா, ஈழத்தைச் சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி, அமுதவாணன் விஜே மகேஸ்வரி, விஜே கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக் டாக் பிரபலம் தானலட்சுமி, நடிகை ரக்ஷிதா, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்ட ராஜேஷ், மெட்டிஒலி சாந்தி, விஜே விக்ரமன், குயின் சி, நிவாஷினி உள்ளிட்ட 21 நபர்கள் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட வரை அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட மூன்று பேரும் தகுதி பெற்றனர் அந்த வகையில் இறுதியில் அசிம் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியின் வெற்றியாளராக கமலஹாசன் அவர்களால் அறிவிக்கப்பட்டார். எனவே அசிம்முக்கு மாருதி சுசுகி பிரேஸா காரும், 50 லட்சம் ரூபாய் காசோலையும், வெற்றி கோப்பையும் வழங்கப்பட்டது இவரை அடுத்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்தனர்.

இவ்வாறு இந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே ரசிகர்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியவர் தான் நடிகை ஆயிஷா. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சத்யா சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மாயா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஆயிஷா தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “propose Day ஆமே” என கூறி தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

aayisha
aayisha

Leave a Comment