ஆலியா மானசா நடிக்கும் புதிய சீரியல்.!! இவருடன் இணையும் முன்னணி நடிகை!! வைரலாகும் புகைப்படம்.

0

serial actress alya manasa and famous actress new serial photo:விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த ஒரே ஒரு சீரியலில் நடித்ததன் மூலம்  இல்லத்தரசிகள், இளைஞர்கள் என இவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் அந்த சீரியலில் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஆலியா மானசா குழந்தை பிறந்த பிறகு இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அவரது கணவரைத் தொடர்ந்து இவரும் மீண்டும் விஜய் டிவியில் ஒரு சீரியலில் நடிக்க இருக்கிறார். இந்த சீரியலைப் பிரவீன் பெண்ணெட் அவர்கள் இயக்கியிருக்கிறார்.அந்த சீரியலில் ப்ரோமோவிற்கு எடுத்த புகைப்படத்தை  தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் தன் அடுத்து நடிக்கப்போகும் சீரியலின் பெயர் என்னன்னு கண்டுபிடியுங்கள் எனவும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவருடன் நடிகை சீத்தாவும் அந்த புகைப்படத்தில் உள்ளார். எனவே இவர் நடிக்கும் அந்த சீரியலில் நடிகை சீத்தாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.