‘ஜிமிக்கி பொண்ணு’ பாடலுக்கு ராஷ்மிகா போல் நடனமாடி வீடியோ வெளியிட்ட ஆலியா மானசா.! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..

0

ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு ஆலியா மானசா ரஷ்மிகா மந்தனா போல் நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் அந்த வீடியோவை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலங்களாக சின்னத்திரை நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இதனை பயன்படுத்திக் கொண்ட நடிகைகள் சீரியல்களின் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து நடனமாடும் வீடியோக்கள் மற்றும் தங்களுடைய கிளாமரான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாநாட மயிலாடை என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் ஆலியா மானசா. இதனை அடுத்து விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலின் மூலம் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

மேலும் இந்த சீரியலில் சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்து வந்த நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும், சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையும் பெற்றுக் கொண்டனர்.

இப்படிப்பட்ட நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார். மேலும் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். பிறகு ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய ஆலியா மனசா சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட இனியா தொடரில் நடித்து வருகிறார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

இப்படிப்பட்ட நிலையில் இனியா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு காலில் ஆக்சிடென்ட்டாகி சமீபத்தில் ஆப்ரேஷன் செய்யப்பட்டது. இவ்வாறு ஒரு பக்கம் சீரியலில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் ஆலியா மானசா மறுபுறம் தொடர்ந்து நடனமாடும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

aliya manasa
aliya manasa

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில்  பெற்றிருந்த ஜிமிக்கி பொண்ணு  என்ற பாடலுக்கு பிரபலங்கள் முதல் சிறியவர்கள் வரை பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஆலியா மானசாவும் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றன.