ராஜா ராணி 2 சீரியல் நடிகரை அடித்த சஞ்சீவ்!! காரணம் இதுதான்..வைரலாகும் வீடியோ.

0

விஜய் டிவியில் திரைப்படங்களின் பெயரை வைத்து பல சீரியல்கள் இயக்கி வருகிறார்கள்.அந்த வகையில் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் நடிகை ஆலியா மானசா மற்றும் நடிகர் சஞ்சீவ்.

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் காதல் வயப்பட்டதால் பின்பு ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில் ஆலியா மனசா குழந்தை பெற்றதால் சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.பிறகு ராஜா ராணி 1 முடிந்த நிலையில் ராஜா ராணி 2வில் தற்போது நடிகர் சஞ்சீவ்க்கு பதிலாக ஆலியா மானசாவிற்கு ஜோடியாக கலர்ஸ் தமிழில் திருமணம் சீரியல் ஹீரோவாக நடித்த சித்து  நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது ராஜா ராணி 2.அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்பதை யோசிக்கும் அளவிற்கு மிகவும் பரபரப்பாகவும் எதிர்பார்ப்புகளுடனும் இந்த சீரியல் அமைந்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறு சீரியலின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென்று சஞ்சீவ் அங்கு சென்று கலாட்டா செய்துள்ளார். அதில் சித்துவை அடிப்பது போல் இருவரும் விளையாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.