பேத்தி பாக்குற வயதில் இளம்பெண்ணை 2வது திருமணம் செய்துக் கொண்ட சீரியல் நடிகர் பப்லு பிரித்திவிராஜன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.?

bablu
bablu

90 காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்த வருபவர் தான் நடிகர் பிரித்திவிராஜ். இவருடைய சொத்து மதிப்பு குறித்த விபரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான பிருத்திவிராஜ் ஒரு கட்டத்தில் திரைப்படங்கள் தொடர்ந்து நடக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் 1990ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் 2000களில் சூப்பர் ஹிட் பெற்ற ரமணி வெர்சஸ் ரமணி, நாகா இயக்கிய மர்ம தேசம் என பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் சன் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கண்ணான கண்ணே என்ற தொடரில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் இவ்வாறு சின்னத்திரையில் மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து ஜிம் ஒர்க்கவுட் செய்து தன்னுடைய உடலை மிகவும் பிட்டாக வைத்துக் கொள்கிறார் எனவே மிகவும் இளமையான அழகுடன் காணப்படுகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் 23 வயதான ஷீட்டல் என்ற இளம் பெண்ணை மறுமணம் செய்து கொண்டார் எனவே இதனால் இவர் குறித்த பல சர்ச்சைகள் வெளியானது. இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் இருக்கும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இவ்வாறு பல ஆண்டுகளாக சீரியல்கள், திரைப்படங்கள் என நடித்த வரும் பப்லுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தற்பொழுது பப்லுவிடம் கிட்டத்தட்ட ஐந்து கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை.