சீரியல் நடிகர் அருண் பிரசாத்துக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.? பெண் யார் தெரியுமா.? வெளியே கசிந்த தகவல்.

விஜய் டிவியில் மக்களின் மனம் கவர்ந்து பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலை சரவணன் மீனாட்சி, ராஜா ராணி போன்ற ஹிட் சீரியல்களை கொடுத்த இயக்குனர் பிரவீன் பென்னெட் எடுத்து வருகிறார்.

இதில் ஹீரோ ஹீரோயினாக பாரதி கண்ணம்மா கதாபாத்திரத்தில் முதலில் அருண் பிரசாத் மற்றும் ரோஷினி நடித்து வந்த நிலையில் திடீரென சில காரணங்களால் ரோஷினி வெளியேறியதை அடுத்து தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினிஷா என்ற பிரபலம் சிறப்பாக நடித்து அசத்தி வருகிறார்.

தற்போது கதையில் பல மாற்றம் ஏற்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் அருண் பிரசாத்திற்கு சமூக வலைதள பக்கங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர் இவரது ரசிகர்கள் பலரும் அருண் எப்போது திருமணம் செய்து கொள்வர் யாரை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என பல குழப்பங்களுடன் இருந்து வந்த..

நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற விருது விழா நிகழ்ச்சியில் விஜய் டிவி சீரியல் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது சீரியல் நடிகர் அருண் பிரசாத் மற்றும் ராஜா ராணி சீரியல் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா இருவரும் மேடையில் மாறி மாறி பேசும் போது இவர்களைப் பற்றி ஜாடமாடயாக  கேள்வி கேட்கப்பட்டது.

அதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா காதலிப்பதாக சில தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது  இருவருக்கும் ரகசியமாய் நிச்சயதார்த்தம் முடிந்தது எனவும் கூறி வருகின்றனர். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Leave a Comment