கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்டு நாய்ங்க கொன்னுட்டங்கம்மா .!இயக்குனர் சேரன் புலம்பல் !!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராகவும் ,இயக்குனராகவும் வலம் வருபவர் சேரன். இவர் 1997ம் ஆண்டு பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார்.அதை தொடர்ந்த அவர் தேசிய கீதம், பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு ,பாண்டவர் பூமி ,தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் போன்ற சிறந்த படைப்புகளை இவர் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டார் என்றே கூறலாம்.

இதனை தொடர்ந்து அவர் 2002 ஆம் ஆண்டு காதல் வைரஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவரே இயக்கி நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன குறிப்பாக ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி போன்ற படங்கள் ஆகும். இந்த நிலையில் சமீபகாலமாக சேரன் அவர்கள் எந்த ஒரு படம் இயக்கவும் இல்லை, நடிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

பல வருடங்கள் கழித்து இயக்குனர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் மட்டுமில்லாமல் இப்படத்தில் அவர் நடித்திருந்தார். இப்படம் நல்ல கதைக்களம் மற்றும் சிறந்த காட்சிகள் ஆகியவை இடம் பெற்றிருந்தாலும் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் இப்படம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை.

இந்த நிலையில் படத்தைப் அமேசன் பிரைமில் பார்த்த ரசிகர் ஒருவர் படம் திரில்லர் என்டேர்டைனிங் இருக்கிறது என கூறியுள்ளார்.அதற்கு சேரன் அநியாயமா கொன்னுட்டாங்கம்மா ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்டு கொன்னுட்டாங்கம்மா எனவும் மேலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் சேரன் நடிகர்.

Leave a Comment