செந்தில், கவுண்டமணி போல வரவேண்டிய மனுஷன் காமெடி நடிகர் ஜனகராஜ் – கடைசியில் இப்படி ஆயிட்டாரு.. காரணம் அவரிடம் இருக்கும் பழக்கம் தான்.

janakaraj
janakaraj

80, 90 காலகட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனது பெயரை மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பரப்பி கொண்டவர் காமெடி நடிகர் ஜனகராஜ் ஆரம்பத்தில் காமெடியனாக வந்தாலும் ஒரு கட்டத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து தனது திறமையைக் காட்டினார்.

இதுவரை தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர்களில் ஒருவராக இவரும் இருக்கிறார். தொன்னூறு காலகட்டங்களில் செந்தில், கவுண்டமணி ஆகியவர்களின்  வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அவர்களுக்கு இணையாக இவரும் தனது சிறப்பான காமெடிகளை கொடுத்து  படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜனகராஜ் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல், ரஜினி போன்ற படங்களில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர். தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு ஒரு கட்டத்தில் சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காமல் போன உடனே டாப் நடிகர்கள் இவரது படங்களில் நடிக்க சற்று தயங்கினார் காரணம் ஜனகராஜ் யாருடனாவது சற்று நெருங்கி பழகி விட்டால் போதும் அவர்களுடன் உடனடியாக பிரச்சனையை வளர்த்து விடுவார்.

அதுதான் அவரிடம் இருக்கும் மிக கெட்ட பழக்கமே. சினிமா பிரபலங்கள் மத்தியிலும் சரி, நண்பர்களிடத்திலும் நெருங்கி பழகிய பின் வாக்குவாதத்தில் ஈடுபடுவார். எந்த பேச்சு பேசினாலும் அதில் எதிரும் புதிருமாக பேசுவது அது சரியில்லை இது சரியில்லை அப்படி இருந்திருக்கலாம் இப்படி இருந்திருக்கலாம் என எதையாவது கூறி உடனே சண்டை வளர்த்து விடுவார்.

இது ரஜினி, கமலுக்கு சுத்தமாக பிடிக்காமல் போகவே கொஞ்சம் கொஞ்சமாக ஜனகராஜ் கழட்டிவிட ஆரம்பித்தனர் அதிலும் குறிப்பாக உலக நான் கமலஹாசன் நடிப்பில் சத்யா திரைப்படத்திற்குப் பின் ஜனகராஜ் உடன் நடிக்க வில்லை அதேபோல ரஜினியும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் சுத்தமாக படங்களே இல்லாமல் போக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதியின் 96 படத்தில் நடித்து மீண்டும் தன்னை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தினார்.