தனது காமெடியால் மக்களை சிரிக்கவைத்த செந்திலின் மகன் புகைப்படம்.! அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.?

80 90 காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில். ஒரு காலகட்டத்தில்  கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்கள் அந்த திரைப்படங்கள் பலவும் வெற்றி என்றே கூறலாம் அந்த அளவு செந்தில் மற்றும் கவுண்டமணி காமெடி ரசிகர்கள் மற்றும் மக்கள் விரும்பிப் பார்ப்பார்கள்.

இந்த நிலையில் மீண்டும் செந்தில் கவுண்டமணி இணைந்து நடிப்பார்களா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியது உண்டு. அதேபோல் அந்த காலத்தில் செந்தில் கவுண்டமணி இல்லையென்றால் படத்தை பார்க்க மாட்டார்கள் அந்த அளவு மிகவும் பிரபலமாக இருந்தார்கள் செந்தில் கவுண்டமணி. கவுண்டமணி தனியாக கூட பல திரைப்படங்களில் நடித்து இருப்பார் ஆனால் செந்தில் தனியாக பெரிதாக எந்தத் திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ஒரு சில திரைப்படங்களை மட்டுமே தோன்றும் மறைவார்.

செந்தில் நடிக்க வருவதற்கு முன்பு ஆயில் மார்ட் கம்பெனியில் வேலை செய்து வந்தார் அதன் பிறகு பிரைவேட் ஒயின் ஷாப் மற்றும் வெயிட்டர் எனப் பல வேலையை செய்து வந்தார் பின்பு  ட்ராமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் அதன்பிறகு 1980ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்தார் படிப்படியாக கிடைத்த ரோல்களில் நடித்து வந்த செந்திலுக்கு ஒரு காலகட்டத்தில் முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது.

நடிகர் செந்தில் முதுகுளத்தூரில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள இலஞ்சம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் 1984 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி கலைச்செல்வி என்பவரை மணந்தார் இவருக்கு டாக்டர் மணிகண்டபிரபு ஹேமச்சந்திர பிரபு என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். செந்தில் தன்னுடைய 13 வயதில் தனது தந்தை திட்டியதற்காக ஊரை விட்டு ஓடி வந்துவிட்டார்.

senthil
senthil

1979ஆம் ஆண்டு ஒரு கோயில் ஒரு தீபம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் 25 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த செந்தில் இதுவரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்த அனைத்து திரைப்படங்களிலும் உள்ள நகைச்சுவை காட்சியை இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் நமக்கு சிரிப்பு வரும் அந்த அளவு மிகவும் பிரபலம் ஆகி விட்டார்கள்.

இந்த நிலையில் செந்தில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ராசாத்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவரின் பெரிய மகன் ஒரு பல் மருத்துவர் இளையமகன் சினிமோட்டோகிராபி படித்துள்ளார் இந்த நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

senthil
senthil
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment