பிரபல அரசியல் கட்சியில் இணைந்த செந்தில்.! அதிர்ச்சியான ரசிகர்கள்

தமிழ் சினிமா உலகில் மறக்க முடியாத காமெடி நடிகர்கள் என்றால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் தான் இவர்கள் 2 பேரும் அந்த காலத்தில் சேர்ந்து  நடிக்காத திரைப்படமே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

மேலும் செந்தில் கவுண்டமணி இல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் நடித்த காமெடி காட்சிக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

அந்தவகையில் செந்தில் இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய நடித்து அசத்தியிருப்பார் அது மட்டுமல்லாமல் தற்போது விளம்பரத்திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் செந்தில்.

இதையடுத்து செந்தில் முக்கிய அரசியல் கட்சியில் இணைந்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.ஆம் செந்தில் பிரபல முக்கிய அரசியல் கட்சியான பாஜகவில் வேல்முருகன் முன்னிலையில் இணைந்து உள்ளாராம்.

மேலும் அவரிடம் இதுகுறித்து கேட்டபோது அதற்கு பதில் அளித்த செந்தில் ஒரு நல்ல கட்சிக்கு செல்லவேண்டும் நினைத்தேன் அதனால் பாஜக கட்சியில் இணைந்தேன் என்று கூறியது மட்டுமல்லாமல் பாஜக ஒரு நல்ல கட்சி என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

senthil

Leave a Comment

Exit mobile version