செந்தில் கவுண்டமணி காமெடியில் வரும் அழகுமணியா இது.?

தமிழ் சினிமாவில் காமெடி ஜம்ப்பவனாக வளம் வந்தவர் செந்தில் மற்றும் கவுண்டமணி இவர்கள் காமெடியை இன்றளவு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இவர்கள் காமெடிதான் தீனி போட்டு வருகிறது. 80, 90 காலகட்டத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரின் காமெடியால் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

நகைச்சுவை உலகின் சக்கரவர்த்தியாக வலம் வந்தார் அதேபோல் இவர்களின் காம்போவில் வெளியான அனைத்து படங்களும் மாபெரும் ஹிட் என்னதான் இவர்கள் இருவரும் தனித்தனியாக காமெடி காட்சிகளில் நடித்திருந்தாலும் இவர்கள் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இன்று எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் தவிர்க்க முடியாத நகைச்சுவை காமெடி நடிகர்களாக செந்தில் கவுண்டமணி இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் சத்யராஜ் நடிக்கும் திரைப்படங்களில் முதலில் கவுண்டமணியின் கால்ஷீட் பெற்று விடுவாராம் அப்படிதான் பல காமெடி காட்சிகள் ஹிட் அடித்தது சத்யராஜ் கவுண்டமணி இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்கள் அதில் ஒரு திரைப்படம் தான் மகுடம் இந்த திரைப்படத்தில் காமெடி காட்சிகள் இன்றளவு ரசிகர் மத்தியில் பிரபலம்.

அந்த படத்தில் கவுண்டமணியிடம் ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தை கொடுத்து இதுதான் என்னுடைய தங்கை என்று கூறிவிடுவார் செந்தில் புகைப்படத்தை பார்த்து ஓகே சொல்லிவிடுவார் கவுண்டமணி அழகு தேவதையை திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என சந்தோஷத்தில் இருப்பார். அப்பொழுது திருமண மேடையில் பெண்ணுக்காக கவுண்டமணி காத்திருப்பார் உடனே செந்தில் மாப்பிள்ளை உங்க அழகுமணி வந்து இருக்கா பாருங்க என கூறியவுடன் புகைப்படத்தை பார்த்து கொண்டு செந்திலின் தங்கையை பார்த்து ஐயோ அம்மா என அலறி அடித்து பேசுவார் இன்றளவும் அந்த காமெடி பிரபலம்.

azhaku mani
azhaku mani

அந்த திரைப்படத்தில் செந்தில் தங்கையாக நடித்தவர் அழகுமணி அவரின் இயற்பெயர் அழகுமணி தான் மாமா என்ற ஒற்றை டயலாக்கில் மிகவும் பிரபலம் அடைந்தார் தற்பொழுது அவருக்கு 49 வயதாகிறது இவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார் தற்பொழுது வேலையை விட்டு விட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாராம்.

azhaku mani
azhaku maniazhaku mani
azhaku mani
azhaku mani