உங்க கூடவே இருந்த பாலாஜி செத்துட்டாரு அதுக்குள்ள இப்படி பண்றீங்க.! செந்தில் கணேஷ் செயலால் கடுப்பாகும் ரசிகர்கள். !!!

senthil ganesh

senthil ganesh: விஜய் டிவியின் பிரபலமும், பிரபல காமெடி நடிகருமான வடிவேலு பாலாஜி சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதுமட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். அச்சு அசல் வடிவேலு போலவே தன்னுடைய பாடி லாங்குவேஜை வெளிப்படுத்தி காமெடியில் கலக்கி வந்த வடிவேலு பாலாஜி.

இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் பிரபலமடைந்தவர், கலக்கப்போவது யாரு நான்காவது சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்ல வில்லை என்றாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தார.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரும் சினிமா பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவரின் இறப்புக்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வடிவேல் பாலாஜி உடன் இணைந்து காமெடி செய்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியும் வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராமர், பாலா, புகழ், யோகி என பல்வேறு நபர்கள் வடிவேலு பாலாஜியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்கள், இறுதியாக கலந்து கொள்ளாத பல பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பல்வேறு கலைஞர்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் செந்தில் கணேஷ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார், அதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வசைபாடி வருகிறார்கள், ஏனென்றால் செந்தில் கணேஷ் வடிவேல் பாலாஜி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காமல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இல் நடைபெற்ற வளையல் காப்பிற்கு சென்ற சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்தில் இது தேவையா என கேள்வி எழுப்பி திட்டி தீர்த்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சில ரசிகர்கள் உங்களுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா கூடவே இருந்த பாலாஜி மரணத்தின்போது போகல அதுக்குள்ள எப்படி இது மாதிரி இருக்கீங்க என செந்தில் கணேஷை கேவலமாக திட்டி உள்ளார்கள்.

Posted by Senthil Ganesh on Friday, September 11, 2020

senthil ganesh
senthil ganesh