சிம்புவின் படத்திற்கு வந்த சோதனை.! சுசீந்திரன் பரபரப்பு தகவல்

eswaran-movie
eswaran-movie

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் படத்தில் இயக்குனர் பாரதிராஜா, நிதி அகர்வால் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பில் இருந்து ஒரு வீடியோ காணொளி இணையதளத்தில் வெளியாகியிருந்தது.

அதில் நடிகர் சிம்பு பாம்பை பிடித்து கோணிப்பையில் போடுவது போல் காட்சி வீடியோ வெளியானது. இதனையடுத்து நடிகர் சிம்புவின் மீது வன உயிரிகள் சட்டத்தின் கீழ் 1972-ன் படி அவர் மீது சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்திருந்தார்கள்.

இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்து இருந்தார்.

அவரிடம் நாங்கள் கூறியது என்னவென்றால் சிம்பு பாம்பு பிடித்தது வெறும் லப்பரால் செய்யப்பட்ட ஒரு பொம்மை போன்ற பாம்பு காட்சிதான் அதை நாங்கள் கம்ப்யூட்டரில் எடிட் செய்து உண்மையாகவே அது பாம்பு போன்று காட்சி தந்து இருந்தோம்.

இதற்கான ஆதாரங்களை கூடிய சீக்கிரம் சமர்ப்பிப்பதாக  வனத்துறை அதிகாரி  கிளமண்ட்  எடிசன்யிடம் தெரிவித்துள்ளோம்.